ஏலகிரி மலையில் முகாமிடும் மிஷ்கினின் பிசாசு 2 – பேயாக நடிப்பது இவர்தானாம்!

வியாழன், 17 டிசம்பர் 2020 (10:47 IST)
இயக்குனர் மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் பூர்ணா பேயாக நடிக்க உள்ளாராம்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. அந்த படத்தில் பிசாசு எதிர்மறை கதாபாத்திரத்தில் உருவாக்காமல் தேவதையை போல உருவாக்கியிருந்தார் மிஷ்கின். அதனால் அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் மிஷ்கின். இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக கார்த்திக் ராஜா மிஷ்கின் படத்துக்கு இசையமைக்க உள்ளார். மற்றொரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்கும் பூர்ணாதான் இந்த படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே மிஷ்கினோடு சவரக்கத்தி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் முழுவதையும் தனது சொந்த ஊரான திண்டுக்கல்லில் படமாக்க உள்ளார் மிஷ்கின். இதற்காக ஏலகிரி மலையில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு வருகிறது படக்குழு.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்