இயக்குனர் பாலாவின் அடுத்த படத்தில் சூர்யா நடித்து அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 34 நாட்கள் கன்னியாகுமரியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் வணங்கான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.