விஜயலட்சுமி ஒரு பாலியல் தொழிலாளி.. கனிமொழி ஏன் அதை கேட்கல?! - சீமான் கேள்வி!

Prasanth Karthick

ஞாயிறு, 2 மார்ச் 2025 (13:50 IST)

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த சீமான், திமுக எம்.பி கனிமொழி மற்ற பாலியல் வழக்குகள் குறித்து பேசாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடந்து வரும் வழக்கு தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் சீமான் ஒரு பேட்டியில் பேசிய விதம் குறித்து திமுக எம்.பி.கனிமொழி “சீமானின் பேச்சைக் கேட்டுக் கொண்டு எப்படிதான் அந்த கட்சியில் பெண்கள் இருக்கிறார்களோ?” என பேசியிருந்தார்.

 

இன்று சென்னை விமான நிலையத்தில் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசிய சீமான் “தமிழ்நாட்டில் தினம்தோறும் நடக்கும் பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் குறித்து கனிமொழி கருத்து கூறினாரா? அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவம் தொடங்கி பள்ளி மாணவிகள் வன்கொடுமை சம்பவங்கள் வரை கனிமொழி இதுவரை கருத்துகளை தெரிவிக்காதது ஏன்?

 

இப்படியான சூழலில் என்னை பாலியல் குற்றவாளி என சொல்ல நீங்கள் யார்? வழக்கு விசாரணையில் இருக்கும்போதே என்னை எப்படி குற்றவாளி என சொல்கிறீர்கள்? என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்றே அவதூறு பரப்பி வருகிறார்கள். என் மீது புகார் அளித்துள்ள விஜயலட்சுமி ஒரு பாலியல் தொழிலாளி. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

 

”Enjoyment without Responsibility” என்று உங்களது தலைவர் பெரியாரே சொல்லியுள்ளார். அதைத்தானே நானும் செய்துள்ளேன். அப்படி பார்த்தால் உங்கள் தலைவர் வழியில்தான் நான் நடந்துள்ளேன். இதில் என்ன தவறு இருக்கிறது? இதற்கு திமுகவினர் என்ன சொல்லப்போகிறார்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்