விசில் அடித்தால் டிக்கெட் ஃப்ரீ

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2016 (17:13 IST)
அட்ரா மச்சான் விசிலு படம் வருகிற 7 -ஆம் தேதி வெளியாகிறது. படத்தை புரமோட் செய்ய வித்தியாசமான முயற்சி ஒன்றை படக்குழு மேற்கொண்டிருக்கிறது.


 


அவர்கள் குரலிலேயே அதனை கேட்போம். 
 
"நீங்கள் விசில் அடிக்கிற மாதிரி வீடியோ அல்லது போட்டோ எடுத்து அதை பேஸ்புக் அல்லது டுவிட்டரில் பதிவு செய்து #AdraMachanVisilu அல்லது @AdraMachanVisilu என்று Tag  பண்ணுங்க. 
 
தேர்ந்தெடுக்கப்படும் 100 நபர்களுக்கு தலா 2 டிக்கெட்டுகள் வழங்கப்படும். இது சென்னை தியேட்டர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த போட்டி ஜூலை 7ஆம் தேதி வரை மட்டுமே."
 
என்ன விசில் அடிக்க தயாராயிட்டீங்களா?
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்