சன்னி லியோன் படத்தில் கிராபிக்ஸுக்காக மட்டும் ரூ.40 கோடி

Webdunia
வெள்ளி, 25 மே 2018 (12:50 IST)
சன்னி லியோன் படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மட்டும் ரூ.40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

 
வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நடித்துவரும் படம் ‘வீரமாதேவி’. சரித்திரப் படமான இதில், இளவரசியாக நடிக்கிறார் சன்னி லியோன். இதற்காக வாள் சண்டை, குதிரையேற்றம் ஆகியவற்றைக் கற்றுக் கொண்டுள்ளார்.
 
100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில், 40 கோடி ரூபாய் கிராபிக்ஸுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. காரணம், 70 நிமிடங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் படத்தில் இடம்பெறுகிறது.
 
‘த லார்டு ஆப் த ரிங்க்ஸ்’ மற்றும் ‘காட்ஸ் ஆப் எகிப்து’ போன்ற ஹாலிவுட் படங்களுக்கு கிராபிக்ஸ் செய்த டீம் தான் இந்தப் படத்துக்கும் கிராபிக்ஸ் செய்கிறது.
 
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளிலும் இந்தப் படம் தயாராகி வருகிறது. சமீபத்தில் ரிலீஸான இதன் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்