டாம் ஹங்ஸுக்கு குரல் கொடுத்த ராணா

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2016 (18:35 IST)
ஹாலிவுட் நடிகர் டாம் ஹங்ஸுக்கு நடிகர் ராணா டப்பிங் பேசியுள்ளார். ஹாலிவுட் படமான இன்ஃபெர்னோ வரும் அக்டோபர் 14 இந்தியாவில் வெளியாகிறது. தெலுங்கு உள்ளிட்ட மாநில மொழிகளிலும் இப்படத்தை வெளியிடுகின்றனர்.


 
 
இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த ராணாவிற்கு படம் ரொம்ப பிடித்துபோகவே, டாம் ஹேங்க்ஸிற்கு டப்பிங் பேச முன்வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி ஷூட்டிங் முடிந்தபிறகு 3 மூன்று நாள் இரவு டப்பிங் பேசி முடித்துள்ளார். டாம் ஹேங்க்ஸ் மிகவும் பிடித்த நடிகர் என்று கூறியுள்ள ராணா, இப்படி தன்னை அவர் படத்தில் இணைத்துக்கொள்வது மகிழ்ச்சியை தருகிறது என்றும் கூறினார். 
 
தெலுங்கில் இந்தப் படத்தின் நாயகன் டாம் ஹங்ஸுக்கு ராணா குரல் கொடுத்துள்ளார். டாம் ஹங்ஸ் போன்ற சிறந்த நடிகருக்கு குரல் கொடுத்ததை பெருமையாக கருதுவதாக ராணா குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்