நேற்று வரை திரையுலகில் சசிகலாவுக்கு ஆதரவு இருந்தது. இப்போது மெல்ல மெல்ல முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளது. பல பிரபலங்கள் வெளிப்படையாகவே ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதில் முதலில் நிற்பவர் நடிகர் கமல் ஹாஸன்.
கமலின் ட்வீட்டுகள் புரியவில்லை என்ற கிண்டல் இருந்தாலும், அவை துணிச்சலாக ஓபிஎஸ்ஸை ஆதரிக்கும் தொனியில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. "ஓபிஎஸ் திறமையானவர். ஜல்லிக்கட்டு விவகாரத்தைச் சிறப்பாகக் கையாண்டார். அவரே முதல்வராகத் தொடரட்டும்," என தெளிவாக பேட்டியும் கொடுத்துவிட்டார் கமல்.
கௌதமி, சித்தார்த், இமான், அருள்நிதி, குஷ்பு, மன்சூர் அலுகான், கங்கை அமரன், கே பாக்யராஜ் ஆகியோரும் பன்னீர் செல்வத்தை ஆதரித்துள்ளார். பன்னீர் செல்வமே முதல்வராகத் தொடரட்டும் என்றும் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.