சினிமா திரையுலகில் முன்னணி நடிகையான அனுஷ்காவுக்கு, விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது 34 வயதாகும் அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்திற்காக அனுஷ்கா தனது உடல் எடையை 20 கிலோ அதிகரித்தார்.
ஆனால் தற்போது யோகா மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளை பின்பற்றி, 18 வயது பெண்ணாக, இளமை, பளபளப்புடன் காட்சியளிக்கிறார். இந்நிலையில் அவரது பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பி மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவரோ படங்களில் பிசியாக உள்ளார்.
பல மாப்பிள்ளைகளை பார்த்து, இறுதியாக ஒருவரை தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 'பாகுபலி 2' வெளியானதும் அனுஷ்காவின் திருமணம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும், தெரிவிக்கப்படுகிறது.