தமிழ் மற்றும் கேரள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலா பால் போலி முகவரி தந்து புதுச்சேரியில் 1 கோடி ரூபாய் மதிப்புடை சொகுசுக் காரை பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் கிரண்பேடி குறிப்பிட்டவாறு எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என்று அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அமலா ட்வீடுக்கு பதில் கூறப்போய், கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நடிகர் ஆர்யா அமலா பாலுக்கு ட்விட்டர் மூலம் ப்ரொபோஸ் செய்துள்ளார் ப்ரொபோஸ் செய்துள்ளார். அதில் ஆர்யா சாலை வரியை மிச்சப்படுத்தினால் படகில் போகலாம் என்று கலாய்த்திருந்தார். அதற்கு அமலா பால் உடம்பை வருத்தி ஓடி, சைக்கிளிங் செய்து நீங்களும் தானே காசை சேமிக்கிறீர்கள் என்று அமலா ஆர்யாவை கலாய்த்தார்.