கமலைத் தொடர்ந்து ரஜினி - சிபிராஜின் பலே ஐடியா

Webdunia
புதன், 20 டிசம்பர் 2017 (14:06 IST)
கமல்ஹாசனைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் நடித்த படத்தின் தலைப்பில் நடிக்க இருக்கிறார் சிபிராஜ்.
சிபிராஜ் நடிப்பில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ரிலீஸான படம் ‘சத்யா’. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கிய இந்தப்  படத்தில், ரம்யா நம்பீசன் ஹீரோயினாக நடித்திருந்தார். தெலுங்கில் வெளியான ‘ஷணம்’ படத்தின் ரீமேக் இது. 1988ஆம் ஆண்டு கமல்ஹாசன், அமலா நடிப்பில் வெளியான படம் ‘சத்யா’. கமல்ஹாசனே தயாரித்த இந்தப் படத்தின்  தலைப்பை, அவரிடம் உரிய அனுமதி வாங்கி பயன்படுத்தினர்.
 
இதைத் தொடர்ந்து, தன்னுடைய அடுத்த படத்துக்கு ‘ரங்கா’ எனத் தலைப்பு வைத்துள்ளார் சிபிராஜ். 1982ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில், ஆர்.தியாகராஜன் இயக்கத்தில் வெளியான படத்தின் தலைப்பு இது. ராதிகா ஹீரோயினாக நடித்த இந்தப் படத்தில், கே.ஆர்.விஜயா, சில்க் ஸ்மிதா ஆகியோர் நடித்திருந்தனர்.
 
அந்தப் படத்தின் தலைப்பை, தன்னுடைய படத்துக்கு வைத்துள்ளார் சிபிராஜ். இந்தப் படத்தை, வினோத் இயக்குகிறார்.  ‘வெற்றிவேல்’, ‘கிடாரி’ படங்களில் சசிகுமார் ஜோடியாக நடித்த நிகிலா விமல், இந்தப் படத்தில் சிபிராஜ் ஜோடியாக  நடிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்