மலேசியாவுக்குப் பறந்த ரஜினி, விஜய்

Webdunia
வெள்ளி, 5 ஜனவரி 2018 (09:29 IST)
மலேசியாவில் நடைபெறும் நட்சத்திரக் கலைவிழாவில் கலந்து கொள்வதற்காக ரஜினி, விஜய் இருவரும் மலேசியா  சென்றுள்ளனர்.
நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக நாளை மலேசியாவில் நட்சத்திரக் கலைவிழா நடைபெற இருக்கிறது. கலைநிகழ்ச்சிகளுக்கு முன்பாக நட்சத்திர கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த விழாவில், முன்னணி நடிகர் - நடிகைகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
 
ரஜினிகாந்த், விஜய் இருவரும் நேற்று இரவு மலேசியா புறப்பட்டுச் சென்றுள்ளனர். ‘விஸ்வரூபம் 2’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளுக்காக அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன், அங்கிருந்து நேரடியாக மலேசியாவுக்கு வருகிறார். மேலும், ஏகப்பட்ட  நடிகர் - நடிகைகளும் மலேசியாவுக்குச் சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்