படத்தலைப்பு வெளியான 10 நிமிடத்தில் டிரண்ட் ஆன அஜித்தின் விசுவாசம்

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2017 (16:23 IST)
அஜித்தின் 58-வது திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தத் தகவலை சத்யஜோதி பிலிம்ஸ் நிர்வாக இயக்குநர் சாய் சித்தார்த் சற்றுமுன்பு ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

 
'விவேகம்' படத்தைத் தொடர்ந்து 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அஜித்தின் 58-வது படத்தின் டைட்டில் 'விசுவாசம்' என்று வைக்கப்பட்டுள்ளது. அதோடு 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்குகிறது எனவும்தி, இத்திரைப்படம் 2018 தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் அஜித்தின் விவேகம் ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புக்கு இடையில் வெளியானது. அஜித்தின் ஸ்டைல், பட கதை, பாடல்கள் என அனைத்து விஷயங்களும் மாஸாக இருந்தது. இந்நிலையில் அஜித் 4வது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி அமைப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இப்புதிய படத்தின் தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் இன்று வியாழக்கிழமை அஜித்தின் புதிய பட பெயர் விசுவாசம் என்று படக்குழு அறிவித்திருந்தனர். அஜித்தின் முந்தைய படங்களுக்கு இடையேயான ஒற்றுமை இன்னும் தொடர்கிறது. அது 'V' ஆங்கில எழுத்தில் தொடங்குவதுதான்.

 
இந்த நிலையில் படத்தின் பெயர் வந்த 10 நிமிடத்தில் உலகளவில் 4வது இடத்திலும், இந்திய அளவில் 1வது இடத்திலும்  விசுவாசம் டிரண்ட் ஆகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்