'லியோ' பட டிக்கெட் பெற நீண்ட வரிசையில் ரசிகர்கள்....'இப்படி செய்வது ஏன்?'- புளூ சட்டை மாறன்
திங்கள், 16 அக்டோபர் 2023 (15:17 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லியோ.
தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் முதல் காட்சி 9 மணிக்கு தான் திரையிட வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் இதனை எதிர்த்து பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வரும் 19ஆம் தேதி வெளியாகும் லியோ திரைப்படம் அதிகாலை 4 மணி காட்சிக்கு வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றும் அதேபோல் காலை 9 மணிக்கு காட்சியை காலை 7:00 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என்றும் தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் அவசர மனுதாக்கல் செய்தது.
இந்த வழக்கின் விசாரணை நாளை காலை முதல் வழக்காக விசாரிக்கப்பட்டும் என நீதிபதி அனிதா சுமந்த் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், கோயம்புத்தூர் மாவட்ட பிராட்வே சினிமாஸில் லியோ பட டிக்கெட் பெறுவதற்காக நீண்ட வரிசையில் நின்றுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுபற்றி சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் தன் டுவிட்டர் பக்கத்தில், பட ரிலீஸ்க்கு முன்பு..ஆன்லைனில் டிக்கட் விற்காமல்.. நீண்ட வரிசையில் மக்களை காத்திருக்க வைத்து.. கவுண்ட்டரில் டிக்கட் வழங்க வேண்டிய காரணமென்ன?
பல ஆண்டுகளாக இந்த நடைமுறை ஏன் தொடர்கிறது? படம் வெளியாக நான்கைந்து நாட்கள் இருந்தும்.. இப்படி செய்வது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.