நடிகர் விஜய் வீட்டின் முன் ரசிகர்கள் தர்ணா போராட்டம் !

செவ்வாய், 22 ஜூன் 2021 (21:35 IST)
நடிகர் விஜய் பிறந்தநாளான இன்று அவரை காண ரசிகர்கள் சிலர் அவர் வீட்டு முன்னால் குவிந்தது பரபரப்பை ஏற்படுத்தினர். அப்போது நடிகர் விஜய்  வீட்டில் இருந்து வந்து தங்களைப் பார்க்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர்.

நடிகர் விஜய்யின் பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் விஜய் நடித்துவரும் பீஸ்ட் படத்தின் முதல், இரண்டாம் போஸ்டர்கள் வெளியாகியுள்ளதால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இதனால் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #BeastSecondLook, #HBDTHALAPATHYVijay உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.

இந்நிலையில் விஜய் பிறந்தநாளான இன்று அவரை காண வேண்டும் என ரசிகர்கள் சிலர் அவர் வீட்டின் முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கலைந்து போக சொல்லி வலியுறுத்தியும் விஜய் வெளியே வந்து ஒருமுறையாவது பார்த்தால்தான் செல்வோம் என அவர்கள் அங்கேயே அமர்ந்ததால் பரபரப்பு எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், இன்று அவரது வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள்  நடிகர் விஜய் வீட்டிலிருந்து வெளியே வந்து தங்களைப் பார்க்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்