விஜய்யின்’ ’பீஸ்ட்’’ பாக்ஸ் ஆபீஸை வேட்டையாடும்!

திங்கள், 21 ஜூன் 2021 (19:18 IST)
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரது ரசிகர்கள் இணையத்தில் அவரது படங்கள்,புகைப்படங்கள், மற்றும் விஜய்65 பட தலைப்பு குறித்த பல விஷங்களை ஷேர் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் நாளை தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். ஆனால் அவரது ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கடந்த வாரம் முதலாய் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது விஜய் 65 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்ட் வெளியாகியுள்ளது.

நாளை விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள விஜய்65  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. சமூக வலைதளங்களில் திரைநட்சத்திரங்கள் மற்றும் நெட்டிசன்களின் பேச்சு எல்லாம் விஜய்யின்  விஜய்65 படம் குறித்தே உள்ளது.

இப்படத்திற்கு பீஸ்ட்( Beast) எனத் தலைப்பிட்டுள்ளனர். பாக்ஸ் ஆபீஸை வேட்டையாக வரவுள்ளது பீஸ்ட் என எம்.எல்.ஏ. கருணாநிதி.ஜே தனது டுவிட்டர் பக்கத்தில்  குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்ஸ் ஆபீஸை வேட்டையாட வரவிருக்கும் #Beast
அதிரடி ஸ்டைல் மன்னன் @actorvijay

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்