புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய பிரபல இளம் நடிகர் !

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (20:54 IST)
தமிழ் திரையுலகில் உள்ள இளம் நடிகர்களில் ஒருவர் ஹரிஸ் கல்யாண். புற்று நோயால் கைவிடப்பட்ட மக்களுக்கு உதவி செய்துள்ளார்.

ஹரிஸ் கல்யாண் நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் பியார் பிரேமா காதல், இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் , தாராளபிரபு இப்படங்களில் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்தார்.

இந்நிலையில் மனிதநேயமுள்ளவராக மக்கள் மனதில் அவர் இடம்பிடித்துள்ளார். அதாவது’ புற்று நோயால் பாதிகப்பட்டு கைவிடப்பட்ட மக்களை பொறுப்புடன் பார்த்துக் கொள்ளும் ஸ்ரீமாதா புற்றுநோய் மருத்துவமனை நிறுவனத்தின் விஜயஸ்ரீ அவர்களுப் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் எட்டு ஆண்டுகளாக இந்தச் சேவை செய்து வருகிறார் ’என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் ஸ்ரீமாதா புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ3.70,000 நன்கொடை கொடுத்துள்ளார். அவரது செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்