டப்பிங் கலைஞர் ரவீனாவுக்கு திருமணம்.. பிரபல இயக்குனரை மணக்கிறார்..!

Mahendran
புதன், 30 அக்டோபர் 2024 (11:31 IST)
பிரபல டப்பிங் கலைஞர் ரவீனா, இயக்குனர் ஒருவரை திருமணம் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
தமிழ் திரையுலகின் முன்னணி டப்பிங் கலைஞர்களில் ஒருவரான ரவீனா பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘லவ் டுடே’, ‘மாமன்னன்’ உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். இவருடைய அம்மா ஸ்ரீஜா ரவியும் டப்பிங் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், ’வாலாட்டி’ என்ற மலையாள திரைப்படத்திற்கு டப்பிங் கொடுக்கும்போது அந்த படத்தின் இயக்குனர் தேவன் ஜெயக்குமாரின் மீது காதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு தரப்புகளின் பெற்றோர்கள் இந்தக் காதலுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளனர். தற்போது இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. 
 
இருவரும் தங்கள் திருமணத்தை உறுதிப்படுத்திய நிலையில், திருமண தேதி உள்ளிட்ட விவரங்களை விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்