பிரபல இயக்குநர் என்னை படுக்கைக்கு அழைத்தார் - முன்னணி நடிகை புகார்

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (22:34 IST)
நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் பிரபலங்கள் மீது சில ஆண்டுகளுக்கு முன் பலரும் மீ டூ புகார் கூறிப் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், முன்னணி நடிகை ஒருவர் இயக்குநர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார்.

இந்தி நடிகை பிராச்சி தேசாய்(Prachi Desai) இன்று மீ டூ புகார் கூறியுள்ளார்.  இவர் இந்தியில் ரா ஆன், லைப் பார்ட்னர், தேரி மேரி கஹானி , போலீஸ் ஹேல், ஏக் வில்லன், கார்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் இன்று  ஒரு பரப்பரபு புகார் கூறியுள்ளார். அதில், ஒரு படத்தில் நடிப்பதற்காக அப்படத்தின் இயக்குநர் தன்னைப் படுக்கைக்கு அழைத்ததாகவும், ஆனால் அதைத் தான் நிரகாரித்து விட்டதாகவும். ஒருவேளை அவரது விருப்பத்திற்கு நான் ஒப்புக்கொண்டிருந்தால் இன்னும் நிறைய படங்களில் தான் நடித்திருக்கலாம் எனக் கூறியுள்ளார்.

பிராச்சி தேசாய் கூறியுள்ளது பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்