விஜயகாந்த்தை புகழ்ந்து பேசிய பிரபல காமெடி நடிகர் !

புதன், 10 மார்ச் 2021 (19:21 IST)
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் இவர் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தை பற்றி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் விஜயகாந்த். தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டில் ஒய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில், அவர் அதிமுகடவுன் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர் தனித்துப்போட்டியிட முடிவெடுத்துள்ளார். இருப்பினும் அமமுகவுடனும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடனும் கூட்டணி குறித்துப் பேசிவருவதாகத் தகவல்கள் வெளியாகிறது.

இந்நிலையில் தமிழி சினிமாவில் இயக்குநர்கள் முதல் பல்வேறு நடிகர்கள் எம்.ஜி.ஆருக்குப் பிறகு எல்லோருக்கும் சோறிட்டவர் விஜயகாந்த் எனவும் அன்னமிட்டே தனது சொந்தைக் கரைத்தவர் எனவும் கூறியதுண்டு.

குறிப்பாக திநகரிலுள்ள ரேணுகா ஹோட்டலுக்கு அருகில் எந்நேரமும் புதிய இயக்குநர்கள், நடிகருக்கான சாப்பாடு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்ததாகத் தெரிவித்தனர்.

தற்போது நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் கூறியுள்ளார். போதும்போதும் என்று கூறினாலும் சாப்பாடுபோட்டு தாய் போல் உபசரிப்பார் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்