தூக்கத்திலேயே உயிரிழந்த பிரபல இளம் நடிகர் ! ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 8 ஜூலை 2019 (16:06 IST)
மூளை நோய் சம்பந்தமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 20 வயது நடிகர் ஒருவர் உறங்கிக்கொண்டிருக்கும் போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிஸ்னியின் படங்கள் ஆரம்பிக்கப்பட்டது முதலே அதன் திரைப்படங்களுக்கும், கார்டூன் கதாபாத்திரங்களுக்கும் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.
 
இந்நிலையில்  இந்த டிஸ்னி தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் உலக அளவில் பிரபலமான நடிகர் கேமரூன் பாய்ஸ் (20). இவருக்கு சமீபத்தில் மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். தீவிர அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அவர் உறக்கத்திலேயே உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. இதை கேமரூனின் செய்தித்தொடர்பாளரே உறுதி செய்துள்ளார்.
சமூக வலைதளமான டுவிட்டரில் இவரை சுமார் 13 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பின் தொடர்கிறார்கள். தற்போது அரவது ரசிகர்கள் சோகத்துடன் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். கேமரூன் பாய்ஸ்  எனும் இளம் நடிகரின் மரணம் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு பெரும்  அதிர்சியை  ஏற்படுத்தியுள்ளது. \

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்