இணையத்தில் உலாவும் தனது போலி ஆபாச வீடியோ! - பதில் அளித்த நடிகை ப்ரக்யா!

Prasanth Karthick
ஞாயிறு, 8 டிசம்பர் 2024 (11:21 IST)

பிரபல நடிகை ப்ரக்யா நக்ராவின் போலி ஆபாச வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

 

 

இன்ஸ்டாகிராமில் பிரபலமான இன்ஃப்ளூயன்ஸர்களாக, கிரியேட்டர்களாக இருப்பவர்களில் ஒருவர் ப்ரக்யா நக்ரா. இவர் தமிழில் ஜீவா நடித்து வெளியான ‘வரலாறு முக்கியம்’ படத்தில் நாயகியாக நடித்து சினிமா உலகிலும் பிரபலமானார். அதை தொடர்ந்து மலையாளத்தில் நடிகலில் சுந்தரி யமுனா, என்4 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

 

சமீபத்தில் ப்ரக்யா நக்ராவின் ஆபாச வீடியோ என ஒரு மார்பிங் செய்யப்பட்ட வீடியோ இணையதளத்தில் வெளியாகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது சில சமூக வலைதளங்களிலும் பரவத் தொடங்கிய நிலையில் இதுபற்றி ப்ரக்யா நக்ராவிற்கு தெரிய வந்துள்ளது.

 

அதை தொடர்ந்து வேதனையுடன் இதுகுறித்து பேசியுள்ள அவர் “இன்னும் மறுப்புடன், இன்னும் அது ஒரு கெட்ட கனவு என்று நான் நம்புகிறேன். டெக்னாலஜி என்பது நமக்கு உதவுவதற்காகவே தவிர, நம் வாழ்க்கையை துயரத்தில் ஆழ்த்தக் கூடாது.

இதுபோன்ற AI உள்ளடக்கத்தை உருவாக்க அதை தவறாகப் பயன்படுத்தும் தீய மனங்கள் மற்றும் அதை பரப்ப உதவும் நபர்களுக்கு பரிதாபப்பட முடியுமா!

 

இவை அனைத்திலும் வலுவாக இருக்க முயற்சிக்கிறேன், இந்த தருணங்களில் எனக்காக இருக்கும் அனைத்து மக்களுக்கும் நன்றி.

வேறு எந்தப் பெண்ணும் இப்படிப்பட்ட சோதனையைச் சந்திக்கக் கூடாது என்றும், நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் நான் நம்புகிறேன், பிரார்த்தனை செய்கிறேன்!” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்