வில்லனா வேண்டாம்; ஹீரோ சப்ஜெக்ட் ஓகே....

வெள்ளி, 24 நவம்பர் 2017 (19:45 IST)
மலையாள திரைப்படங்களில் முன்னணி நடிகராக இருக்கும் பகத் பாசில் வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார். 
 
மோகன் ராஜ இயக்கி வரும் வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் பகத் பாசிலும் நடித்துள்ளார். 
 
இதி அவர் தமிழில் சினிமாவில் அறிமுகமாகும் முதல் படமாகும். முதல் படத்திலேயே வில்லனாக நடிப்பதால் அவரை தேடி வரும் அடுத்தடுத்த தமிழ் படங்களும் வில்லன் கேரக்டரையே கொண்டுள்ளதாம். 
 
ஆனால் அவருக்கு வில்லன் வேடத்தில் நடிக்க விருப்பம் இல்லையாம். வில்லன் கதைகளோடு வருகிறவர்களை திருப்பி அனுப்பிவிடுகிறாராம்.
 
மலையாளத்தில் ஹிரோவாக நடித்துவிட்டு தமிழில் எப்படி வில்லனாக நடிக்க முடியும் என தயங்குகிறாராம். இதனால், தமிழிலும் ஹீரோவுக்கான கதைகளாக கேட்டு வருகிறார் பகத் பாசில். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்