‘வில்லன்’ 15ஆம் ஆண்டைக் கொண்டாடிய அஜித் ரசிகர்கள்

திங்கள், 6 நவம்பர் 2017 (14:39 IST)
அஜித்தின் ‘வில்லன்’ வெளியாகி 15ஆம் ஆண்டு நிறைவடைந்ததைக் கொண்டாடி வருகிறார்கள் அவருடைய ரசிகர்கள்.


 


கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு வெளியான படம் ‘வில்லன்’. அஜித் இரண்டு வேடங்களில் நடித்த இந்தப் படத்தில், மீனா மற்றும் கிரண் இருவரும் ஹீரோயின்களாக நடித்திருந்தனர். இவர்களுடன் ரமேஷ் கண்ணா, சுஜாதா, பெப்சி விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பிளாக் பஸ்டர் ஹிட்டான இந்தப் படம், ஹிந்தியில் டப் செய்து வெளியிடப்பட்டது. தெலுங்கில் ‘வில்லன்’ என்ற பெயரிலேயே ரீமேக் செய்யப்பட்டது. ராஜசேகர் ஹீரோவாக நடித்தார்.

கடந்த 4ஆம் தேதியுடன் இந்தப் படம் ரிலீஸாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. அதைப் பல்வேறு விதங்களில் கொண்டாடி வருகின்றனர் அவருடைய ரசிகர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்