ஆஸ்கர் விருது வென்ற இயக்குனரின் படத்துக்கு ‘No’ சொன்ன ஃபஹத் பாசில்… காரணம் இதுதானாம்!

vinoth

ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2025 (10:38 IST)
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பஹத் பாசிலுக்கு மலையாள மொழி தாண்டியும் ரசிகர்கள் ஏராளம். அவரின் படங்கள் தமிழகத்திலும் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் நடித்திருந்த விக்ரம் மற்றும் புஷ்பா அகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக அமைந்தன.

சமீபத்தில் அவர் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய ஆவேஷம் திரைப்படம் பிளாக்பஸ்டராகி 150 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.  கடந்த மாதம் அவர் நடிப்பில் வெளியான ‘மாரீசன்’ படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்த தகவல் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

அதில் “இயக்குனர் அலக்சாண்ட்ரோ கொன்ஸாலஸ் இன்னாரித்து படத்தில் நடிக்க நான் தேர்வானேன். ஆனால், அவர் என் பேச்சுவழக்கு பற்றி சந்தேகப்பட்டார். இதற்காக மூன்று முதல் நான்கு மாதம் வரை அமெரிக்காவில் வந்து தங்கவேண்டும் என்றார். அதற்காக சம்பளம் எதுவும் இல்லை என்றும் சொன்னார்கள். அதனால்தான் நான் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

இன்னாரித்து இரண்டு முறை ஆஸ்கர் விருது வென்ற இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் பா ரஞ்சித், இயக்குனர் ராம், வெற்றிமாறன் போன்றவர்களின் ஆதர்ஸ இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்