பன்னாட்டு கம்பெனிக்கு எதிரான படத்தில் முன்னாள் முதல்வர்

Webdunia
திங்கள், 4 ஜூலை 2016 (18:21 IST)
கேரளாவின் முன்னாள் முதல்வர் தோழர் அச்சுதானந்தன், பன்னாட்டு குடிநீர் கம்பெனிக்கு எதிரான படத்தில் நடிக்கிறார்.


 
 
கேம்பஸ் டைரி என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் மாணவர்கள் பன்னாட்டு குடிநீர் கம்பெனிக்கு எதிராக போராடுகிறார்கள். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் போராளி வேடத்தில் அச்சுதானந்தன் நடிக்க உள்ளார். 
 
93 வயதாகும் அச்சுதானந்தன் இந்த முறை கேரளாவின் முதல்வராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்சி மேலிடம் தொண்டர்கள் விருப்பத்துக்கு மாறாக பினராய் விஜயனை முதலமைச்சராக்கியது. 
 
அச்சுதானந்தன் நடிக்கும் காட்சிகள் வரும் ஒன்பதாம் தேதி முதல் படமாக்கப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்