சன் டிவியில் முடிய போகும் எதிர்நீச்சல் சீரியல்.. இயக்குனர் திருச்செல்வம் வீட்டில் டும் டும் டும்..!

Siva

வெள்ளி, 31 மே 2024 (13:27 IST)
சன் டிவியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் என்ற சீரியல் முடிவுக்கு வர இருக்கும் நிலையில் இயக்குனர் திருச்செல்வம் வீட்டில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. 
 
சன் டிவியில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் எதிர்நீச்சல் என்ற சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இந்த சீரியலில் குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்த ஜி மாரிமுத்து மறைந்த பின்னர் ஒரு சிறிய பின்னடைவு ஏற்பட்டாலும் அதன் பின்னர் வேல ராமமூர்த்தி இந்த கேரக்டரில் நடித்து சீரியலை விறுவிறுப்பாக்கினார் என்பதும் தெரிந்தது. 
 
இந்த நிலையில் அடுத்த மாதத்துடன் இந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதாகவும் சமீபத்தில் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகையர் தங்களது சமூக வலைதளத்தில் சீரியல் முடிய போவதை உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியல் முடிய போகும் நிலையில் இந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் மகளுக்கு வரும் 8ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் திருமண பத்திரிகை கொடுக்கும் பணியில் பிஸியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து திருச்செல்வம் மகளுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்