யூட்யூப் சேனல்களில் மாரிமுத்து மரணம் என நான்கு நாட்களுக்கு முன்பே வீடியோ போட்டு பணம் சம்பாதிக்கிறார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள்? ஒவ்வொருத்தருடைய செண்டிமெண்ட், எமோஷனலை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க ஆரம்பித்தால் அது ரொம்ப தப்பு.
ஒருத்தரை சாவடித்து தப்பான பொய்ச்செய்தி கிளப்பி விட்டு பணம் சம்பாதித்தால் அது உங்களுக்கு உருப்படுமா? தயவு செய்து அதை பண்ணாதீர்கள், நல்ல விஷயத்தை மட்டும் செய்தியாக போடுங்கள் என்று தெரிவித்தார். அவரது இந்த பேட்டி ஆவேசத்தை ஏற்படுத்தி உள்ளது.