உதயநிதி கருத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை: காங்கிரஸ் மூத்த தலைவர் பேட்டி..!

வியாழன், 7 செப்டம்பர் 2023 (17:48 IST)
உதயநிதி கருத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் பேட்டி அளித்துள்ளார்.
 
 சமீபத்தில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கருத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா தெரிவித்துள்ளார்.
 
'சர்வதர்ம கொள்கைகளில்தான் காங்கிரஸ் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் எந்த ஒரு நம்பிக்கையையும் வேறு எதையும் விட கீழானது அல்ல என்பதே காங்கிரஸ் கொள்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  
 
மேலும் பாரத் மற்றும் இந்தியா ஆகிய பெயர்களுக்கு இடையே மோதலை உருவாக்க பாஜக முயல்கிறது என்றும் தங்கத்தை கோல்ட் என்று சொன்னாலும் சோனா என்று ஆங்கிலத்தில் சொன்னாலும் விலை மாறாது என்பது போல் எந்த பெயரை வைத்தாலும் இந்திய மக்களின் அடையாளம் மாறாது என்று கூறினார்
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்