நர்ஸாக மாறிய செய்தி வாசிப்பாளினி அனிதா சம்பத் - வைரலாகும் வீடியோ!

Webdunia
ஞாயிறு, 22 மார்ச் 2020 (10:38 IST)
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா சம்பத் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்தார். அதன் பின்னர் காப்பான் உள்ளிட்ட பல படத்தில் நடித்திருந்தார்.

இதற்கிடையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது நீண்டநாள் காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டதாக திடீரென அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்திருந்தார். இந்த திருமண செய்தி அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாது மீம்ஸ் கிரியேட்டர்களும் கவலையுடன் மீம்ஸ்களை போட்டு இணையவாசிகளின் கவனத்தை திருப்பினர்.


இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் செய்தி வாசிப்பாளராக தனது பணியை சிறப்பாக செய்துவந்த அனிதா தற்போது "EMERGENCY" என வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இதில் அவருடன் ஆர், ஜே. ஆனந்தா, ஹரிஜா என இணையதள பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த தொடரின் டீசர் புட் சட்னி யூடுயூப் பக்கத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது. இதோ அந்த வீடியோ...

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்