எடிட்டரான விஜய் ஆண்டனி

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2017 (12:09 IST)
இசையமைப்பாளராக இருந்து நடிகரான விஜய் ஆண்டனி, தற்போது எடிட்டராகவும் பணியாற்றியுள்ளார்.

 
 
அறிமுக இயக்குநர் சீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘அண்ணாதுரை’. ஆசிரியர், குடிகாரன் என  இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன்  பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
இந்தப் படத்தில், எடிட்டராகவும் பணியாற்றியுள்ளார் விஜய் ஆண்டனி. “எடிட்டிங் குறித்த அறிவு ஏற்கெனவே எனக்கு இருக்கிறது. எடிட்டராகப் பணியாற்றியது சந்தோஷத்தை அளிக்கிறது. எப்படி சில வருடங்களுக்கு முன்பு நடிகனாக தைரியமாகக் களமிறங்கினேனோ, அதேபோல் தான் எடிட்டராகவும் களமிறங்கினேன். படம் நன்றாக வெளிவந்திருப்பதில் மகிழ்ச்சி” என்கிறார்  விஜய் ஆண்டனி. நவம்பரில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்