’கமல் 234’ படத்தில் இணைந்த பிரபல ஹீரோ: அதிகாரபூர்வ அறிவிப்பு!

திங்கள், 6 நவம்பர் 2023 (14:25 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் ’கமல் 234’ படத்தை மணிரத்னம் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியாக உள்ளது
 
இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் இணைந்துள்ளதாக சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் படத்தில் துல்கர் சல்மார் முதன்முதலாக நடிக்க இருந்தாலும் ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’ஓகே கண்மணி’ என்ற படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
’கமல் 234’படத்தில் துல்கர் சல்மான் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  கமல், மணிரத்னம் ஆகிய இரண்டு மேதாவிகளின் திரைப்படத்தில் இணைந்துள்ளது தனக்கு பெருமையாக உள்ளது என்றும் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த அனைவருக்கும் எனது நன்றி என்றும் துல்கர் சல்மான்  தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். 
 
துல்கர் சல்மானை அடுத்து இன்னும் யாரெல்லாம் இந்த படத்தில் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்