இன்று டைட்டிலோடு வெளியாகிறது கமல்- மணிரத்னம் பட ப்ரோமோ வீடியோ!

திங்கள், 6 நவம்பர் 2023 (07:18 IST)
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால் முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் பெரிதாக வசூல் செய்யவில்லை. இந்நிலையில் மணிரத்னம் அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் மணிரத்னம். நாயகன் படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகிறார்கள். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

இந்த படத்தின் பூஜை மற்றும் ப்ரமோஷன் வீடியோ ஷூட்டிங் சமீபத்தில் நடந்த நிலையில் அடுத்த ஆண்டு ஷூட்டிங் தொடங்க உள்ளது. இந்த படத்தில் கதாநாயகிகளாக நயன்தாரா மற்றும் திரிஷா ஆகிய இருவரும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாலை இந்த படத்தின் ப்ரமோஷன் வீடியோ வெளியாக உள்ள நிலையில் இப்போது கூடுதல் தகவலாக படத்தின் டைட்டிலும் இன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இது கமல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்