ஓடிடியில் வெளியாகும் நானியின் டக் ஜெகதீஷ்!

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (16:35 IST)
நடிகர் நானி நடித்துள்ள டக் ஜெகதீஷ் திரைப்படம் ஓடிடியில் ரிலிஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நானி, ரீத்து வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள டக் ஜெகதீஷ் திரைப்படம் ஏப்ரல் 23 ஆம் தேதி ரிலீஸாக இருந்தது. நின்னுகோரி மற்றும் மஜிலி ஆகிய இரண்டு வெற்றிப் படங்களுக்குப் பிறகு நானி – இயக்குனர் சிவா நிர்வானா கூட்டணியில் இந்த படம் உருவாகியுள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் இப்போது கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி வருவதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது அந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் ப்ரைமில் பேச்சுவார்த்தையை முடித்துள்ள நானி விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பை வெளியிடுவார் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்