சென்னையில் நாளை முதல் 4 நாட்களுக்கு ஊரடங்கு ... எவை இயங்கும் ? எவை இயங்காது ?

சனி, 25 ஏப்ரல் 2020 (22:46 IST)
இன்று தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்தும் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1821 ஆக அதிகரித்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


மேலும், சென்னையில் இன்று மட்டும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 94 பேர் குணமடைந்துள்ளனர்.சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 மருத்துச்வர்கள், 1 செவிலியரும் குணமடைந்துள்ளனர். 7 பேரும் பிளாஸ்கா சிகிச்சைக்கு உதவ தயாராக இருக்கின்றனர் என என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாளை முதல், நான்கு நாட்கள் சென்னையில் ஊரடங்கு பிறப்பித்துள்ளதால், எவை எவை இயங்கும் என்பதைப் பார்க்கும்.

தலைமைச் செயலகம் சுகாதாரத்துறை , குடும்பநலன், காவல்துறை, ஆவின் (தேவையான பணியாளர்களுடன் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் ஆகியவை 33%  பணியாளர்களுடன் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயப்பேடு சந்தை,  காய்கறி & பழங்கள் விற்பனை செய்யும் நடமாடும் கடைகள் செயல்படும்.

பெட்ரோல் பங்குகள் பங்குகள் (காலை 8 – 12 மணிவரை ) இயங்கும்.

அம்மா உணவகங்கள் செயல்படும்..

குடிநீர், பால், சிலிண்டர் விநியோகம் போன்றவை செய்யப்படும்.
ஏடிஎம்கள் இயங்கும்.

சரக்குப் போக்குவரத்து இயங்கும்.

ஹோட்டல்களில் இருந்து உணவு டெலிவரி செய்யப்படும்.

சமூக சமையலறை கூடங்கள், ஊடகங்கள் அனைத்தும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவை இயங்காது என்றால், மளிகைக் கடைகள், தனியார் நிறுவனங்கள், பத்திரப்பதிவு அலுவலகங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்