கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை: அமைச்சர் விஜயபாஸ்கர்!

ஞாயிறு, 26 ஏப்ரல் 2020 (16:36 IST)
கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,942 லிருந்து 26,496 ஆக அதிகரித்துள்ளது.   
 
அதோடு, கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 779லிருந்து 824ஆக உயர்ந்துள்ளது, அதேபோல கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,210 லிருந்து 5,804 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  
 
குறிப்பாக தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1821 ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என தகவல் தெரிவித்துள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர். மேலும், ஒரு வாரத்திற்குள் அனுமதிபெற்று பிளாஸ்மா தெரபி மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்