நடிகர் சுதீப் பாணியில் சிகை அலங்காரம் செய்ய வேண்டாம்- ஆசிரியர்கள் வலியுறுத்தல்

செவ்வாய், 25 ஜூலை 2023 (13:18 IST)
கர்நாடக மாநிலம் சென்னப்பா சித்தராமப்பா நாவிக் பள்ளி ஆசிரியர்கள் சலூன் கடைகளில் மாணவர்களுக்கு சுதீப் பாணியில் சிகை அலங்காரம் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தி வருகிறன்றனர்.

கன்னட  சினிமாவின் முன்னணி நடிகர் சுதீப். இவர் பின்னணி பாடகர், எழுத்தாளர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளார் எனப் பன்முக கலைஞராக இருக்கிறார்.

இவர், தாயவ்வ, கிச்சா, தம், நந்தி, சந்து, விஜய்யுடன் இணைந்து புலி, நான் ஈ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த  நிலையில், தற்போது சுதீப் ஹெப்பிலி என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் அவரது சிகை அலங்காரம் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

இவரது சிகை அலங்காரம் போன்று அங்குள்ள மாணவர்களும் தலைமுடியை வெட்டியதால், கர்நாடக மாநிலம் சென்னப்பா சித்தராமப்பா நாவிக் பள்ளி ஆசிரியர்கள் ''சலூன் கடைகளில் மாணவர்களுக்கு சுதீப் பாணியில் சிகை அலங்காரம் செய்ய வேண்டாம்'' என்று வலியுறுத்தி வருகிறன்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்