இப்பகுதியைச் சேர்ந்த ஒரு மாரேஷ், விஜய் இருவரும் நண்பர்கள் ஆவர். இருவரும் சரக்கு ஆட்டோவில் துணிகள் கொண்டு சென்று வியாபரம் செய்து வந்தனர். இந்த நிலையில், விஜய்யின் வீட்டிற்கு மாரேஷ்(34) அடிக்கடி சென்று வந்த நிலையில், மாலாவுடன் பழக்கம் ஏற்பட்டது.
அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த விஜய், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாரேஷின் கழுத்தை அறுத்து, ரத்தம் கொட்டியபோது, அதைக் குடித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த வீடியோ கடந்த 19 ஆம் தேதி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விஜய்யை கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.