’’இதைச் செய்யாதீர்…ஒன்றரை வருட போராட்டம்’’- மாஸ்டர் பட இயக்குநர் டுவீட்

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (22:03 IST)
மாஸ்டர் படம் குறித்த எதாவது கிளிப்ஸ் வெளியே வந்தால் அதை ஷேர் செய்ய வேண்டாமென இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டுவீட் பதிவிட்டுள்ளார்.

.
விஜய் ,சேதுபதி, நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

வரும் ஜனவரி 14 ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் தியேட்டரில் ரிலீஸாகவுள்ள நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பான நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தின்  5 வது புரோமோ சனிக்கிழமை  வெளியாகி வைரலானது. இதில் விஜய் சேதுபதி பேசும் பஞ்ச் டயலாக் இடம்பெற்றுள்ளது.

அதில், உலகத்தில எவனப் பாத்துனாலும் பயப்படலாம். ஆனா சாவ் நம்மல நெருங்கிடுச்சின்னா, எதிர்க்க ஒருக்க எமனா இருந்தாலும் பயப்படக்கூடாது எனப் பேசுவதுபோன்ற வீடியோ வைரலானது.

இந்நிலையில் விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தில்  இடம்பெற்றுள்ள  ஒரு காட்சி குறித்த புகைப்படத்தை இன்று  தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ஒரு டுவிட் பதிவிட்டுள்ளார். அதில்,  அன்புக்குரியவர்களுக்கு, மாஸ்டர் படம் ஒன்றரை வருடப் போராட்டங்களுக்குப் பிற்கு திரைக்கு வருகிறது. நீங்கள் எல்லோரும் தியேட்டரில் படம் பாருங்கள். எதாவது படம் குறித்து லீக் வெளியே வந்தால் அதை ஷேர் செய்ய வேண்டாம். நன்றி இது உங்களுடைய மாஸ்டர் எனத் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் படம் கேரளாவில் 13 ஆம் தேதியும், வரும் ஜனவரி 14 ஆம் தேதி தமிழகத்தில் திரையிடப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்