கனகாவின் தாயார் நடிகை தேவிகாவின் மறைக்குப் பிறகும் அவர் குறித்த செய்திகள் மர்மமாகவே இருந்தன. திருமணம் ஆகிவிட்டது, என்னுடைய கணவரை யாரோ கடத்திவிட்டார்கள் என கனகா சில வருடங்கள் முன் புகாரளித்து மீண்டும் ஊடகங்களின் முன் தோன்றினார். தனது சொத்துக்களை சிலர் அபகரிக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனாலும் அதன் பின்னர் காணாமல் போனார்.