“அப்பாவுடன் டிஸ்கஸ் பண்ண மாட்டேன்” – சிபிராஜ்

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (12:39 IST)
தான் நடிக்கும் படங்கள் பற்றி அப்பாவுடன் டிஸ்கஸ் பண்ண மாட்டேன் என நடிகர் சிபிராஜ் தெரிவித்துள்ளார்.


 
நடிகர்கள் அல்லது இயக்குநர்களின் குழந்தைகள் நடிக்கவந்தால், அவர்கள் தங்கள் படங்களின் கதைகளை பெற்றோருடன் டிஸ்கஸ் செய்வார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இந்த விஷயத்தில் சிபிராஜ் அப்படியே நேர் எதிர். “ஆரம்பத்தில் அப்பாவுடன் சேர்ந்துதான் பல படங்களில் நடித்தேன். எனவே, கதை கேட்கும்போது இருவரும் சேர்ந்துதான் கேட்போம். கதை கேட்டபிறகு, அதைப்பற்றி டிஸ்கஸ் செய்து முடிவெடுப்போம். ஆனால், நான் நாயகனாக நடிக்கத் தொடங்கியபிறகு, நானே என் கதைகளை முடிவு செய்கிறேன். ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்வரை அப்பாவிடம் அதைப் பற்றி சொல்ல மாட்டேன்.

நான் சிலபல படங்களில் நடித்துவிட்டேன். எனவே, எந்தக் கதை எனக்குப் பொருத்தமாக இருக்கும், இருக்காது என எனக்கு நன்றாகவே தெரியும். எனக்கு சந்தேகம் ஏற்படும்போது, என் குடும்பத்தார் உதவத் தயாராகவே இருக்கின்றனர். ஆனால், ஒரு படத்தில் நடிக்கிறேனா, இல்லையா என்பதை நான் தான் முடிவு செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் சிபிராஜ்.
அடுத்த கட்டுரையில்