இந்நிலையில், செல்வமணி கூறியதாவது :
பையனூரில் அரசு வழங்கியுள்ள நிலத்தில், 6 ஆயிரம் குடியிருப்புகள் கட்ட முடியும். முதல்கட்டமாக 1000 ஆயிரம் குடியிருப்புகள் கட்ட இருக்கிறொம். அனைத்து நடிகர்கள், தொழிற்சாலைகள் பணியாளர்கள் என அனைவருக்கும் ஒரே இடத்தில் வீடுகள் அமைத்து திரைப்பட நகரமாக்க முடிவு செய்துள்ளோம். அதன் அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும் என தெரிவித்துள்ளார். அதனால், இன்னும் இரண்டு ஆண்டுகள் சினிமா பையனூருக்கு மாறிவிடும் என தெரிவித்துள்ளார்.