மிஷ்கின் ஒரு டவுண்லோடு இயக்குநர்- பி.சி.அன்பழகன் குற்றச்சாட்டு!

J.Durai

திங்கள், 6 மே 2024 (18:35 IST)
திரைப்பட இயக்குநர் மிஷ்கின் ஒரு டவுண்லோடு இயக்குநர் என திரைப்பட இயக்குநர் பி.சி.அன்பழகன் கன்னியாகுமரியில்  செய்தியாளர்களிடம் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
 
மலையாள சினிமா மற்றும் தமிழ் சினிமாவின் பிதாமகன்களாக திகழ்ந்த ஜே.சி.டேனியல், என்.எஸ்.கிருஷ்ணன், கே.வி. மகாதேவன் உள்ளிட்ட என யாரும் தங்களை ஜாதி ரீதீயாகவோ,மத ரீதியாகவோ அடையாளம் காண்பித்தது இல்லை.
 
தற்போது தமிழ் சினிமாவில் ஜாதி, மதம் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழில் பிரபலமாக இருந்த நடிகை ஒருவரை  இழிவாக பேசி திரைப்பட இயக்குநர் மிஷ்கின் பேசியுள்ளார். 
 
மேலும் கோயிலுக்கு செல்லாவிட்டாலும் பரவாயில்லை தியேட்டர்களுக்கு வாருங்கள் என இந்து மதத்தை சுட்டிக்காட்டி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் திறமையான இயக்குநர்களாக இருந்துவரும் மணிரத்னம் போன்ற இயக்குநர்கள் அதிகமாக பேசுவதில்லை.
 
சினிமாவில் வெற்றியை மட்டுமே இவர்கள் சிந்திப்பதால் இன்றைக்கும் ஜொலித்து வருகின்றனர் என செய்தியாளர்களிடம் திரைப்பட இயக்குநர் அன்பழகன் கடுமையான குற்றச்சாட்டுகளை. செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்