அனுஷ்கா தனது பிறந்தநாளில் டிரைவருக்கு அளித்த பரிசு என்ன தெரியுமா?

Webdunia
புதன், 8 நவம்பர் 2017 (13:14 IST)
நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு நேற்று தனது 38வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு  தனது டிரைவருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அந்த காரின் மதிப்பு ரூ. 12 லட்சம் ஆகும்.

 
இது குறித்து அனுஷ்கா கூறுகையில், எனது கார் டிரைவர் கஷ்டப்பட்டு வேலை செய்கிறார். என்னை நன்றாக கவனித்து  கொள்கிறார். அவரின் நேர்மையான உழைப்பை பார்த்துதான் நான் அவருக்கு காரை பரிசாக அளித்துள்ளேன். காரை பரிசாக அளித்ததில் இருவரும் மகிழ்ச்சியை தருகிறது. வெளியேயும், உள்ளேயும் என்று நடிகை அனுஷ்கா கூறியுள்ளார்.
 
அனுஷ்கா ஷெட்டி பாகுபலி படத்தில் ராஜகுமாரியாக நடித்தார். இவர் உண்மையிலேயே ராஜகுமாரியும் கூட. இவரது  தற்போதைய சொத்து மதிப்பு ரூ 140 கோடி. ஒரு படத்திற்கு ரூ 5 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்.
 
அனுஷ்கா தற்போது 'பாக்மதி' என்ற படத்தில் நடித்து வருகிறார். திரில்லர் படமாக உருவாகும் இதில் அனுஷ்காவுடன்  இணைந்து உன்னி முகுந்தன், ஆதி, ஜெயராம், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்தை ஜி. அசோக் இயக்குகிறார். தற்போது பாக்மதி படத்தின் இறுதிகட்ட பணிகளும் முடியும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில், இப்படம் ஜனவரியில் வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்