இளைஞர்கள் ஏமாற வேண்டாம்- அமைச்சர் அன்பில் மகேஷ்

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (23:10 IST)
அரசு வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களிடம் பணம் பறித்து ஏமாற்றும்  வேலைகள் நடந்து வரும் நிலையில், அரசு வேலைக்கான யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினால் யாரை நம்பியும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்!  இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருங்கள். பணம் கொடுத்து  ஏமாந்தவர்கள் புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்