திமுகவினர் வெற்றிக் கொண்டாட்டம்..காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (15:40 IST)
கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக இடையே பலத்த போட்டிகள் காணப்பட்டது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி திமுக தனிப்பெரும்பானைமைக்கும் அதிகமாக சுமர் 152 தொகுதிகளிலும், அதிமுக 78 இடத்திலும் முன்னைலையில் உள்ளது. இதனால் திமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது.

இதனால் திமுகவினர் சென்னை அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

தமிழகத்தில் கொரொனா இரண்டாம் அலைப் பரவலால் சில தளர்வுகளுடன் கூடிய  ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இதைத் தடுக்கத் தவறிய காவல் ஆய்வாளர் முரளி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்