மீண்டும் சினிமாவில் டிடி… காமெடிக்கு பேர் போன இயக்குனர் படத்தில் ஒப்பந்தம்!

ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (10:20 IST)
சின்னத்திரை புகழ் திவ்யதர்ஷினி மீண்டும் சினிமாவில் கால்பதித்துள்ளார்.

நடிகர் சுந்தர் சி யின் படங்களுக்கு என்றே ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் உண்டு. வழக்கமாக காமடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை உருவாக்கும் சுந்தர் சி, கடந்த சில ஆண்டுகளாக பேய் படங்களாக எடுத்து ரசிகர்களை கொஞ்சம் ஏமாற்றமளித்தார். இந்நிலையில் இப்போது மீண்டும் தன்னுடைய பழைய ரூட்டுக்கே திரும்பியுள்ள அவர் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று ஹீரோக்களை வைத்து ஒரு காமெடி படத்தை இயக்க உள்ளாராம். இந்த படம் இந்தியில் வெளியான கபூர் & சன்ஸ் என்ற படத்தின் தழுவலாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. சென்னையில் நடக்கும் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அடுத்து ஊட்டிக்கு படப்பிடிப்பை நடத்தி மொத்தமாக ஒரே கட்டத்தில் படப்பிடிப்பை முடிக்க உள்ளாராம் சுந்தர் சி. இந்த படத்தின் மூலம் 19 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர் சி யும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைய உள்ளனர்.

இப்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் விஜய் டி வி புகழ் தொகுப்பாளர் டிடி என்கிற திவ்யதர்ஷினி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆரம்ப காலத்தில் விசில் உள்ளிட்ட படங்களில் டிடி நடித்திருந்தார். ஆனால் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதால் கிடைத்த பிரபல்யத்தால் சின்னத்திரையில் மட்டும் கவனம் செலுத்தி வந்த டி டி இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்