போனி கபூரோடு நான்காவது முறையாக இணையும் ஹெச் வினோத்… ஆனால் ஹீரோ அஜித் இல்லை!

சனி, 26 பிப்ரவரி 2022 (16:36 IST)
இயக்குனர் ஹெச் வினோத் வலிமை படத்துக்கு பின்னர் அஜித் 61 படத்தை இயக்க உள்ளார்.

அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். வலிமை ரிலீஸுக்கு பின் இதற்கான வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஐதராபாத்தில் தொடங்க உள்ளது.

அஜித் 61 படம் குறுகிய கால படமாக உருவாக உள்ளதால் மூன்று மாத காலத்துக்குள் மொத்த படமும் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. இதையடுத்து ஹெச் வினோத் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளாராம். இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதியோடு முக்கியக் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்