இதற்கான தடுப்பு மருந்து ஸ்விட்சர்லாந்தில் தயாரிக்கப்படுகிறது. அதை வாங்க ரூ.16 கோடி தேவைப்படும் என்ற நிலையில் சமூக வலைதளங்கள் மூலமாக நிதி அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. பலர் தாராளமாக நிதி அளித்ததின் பேரில் குழந்தைக்கு மருந்து வாங்குவதற்கான பணம் கிடைத்துள்ளது. ஆனால் மருந்தை இந்தியாவிற்குள் கொண்டு வர ரூ.6 கோடி இறக்குமதி வரி உள்ளதால் மருந்தை வாங்குவதில் சிக்கல் இருந்து வந்தது.
இதுகுறித்து பலரும் மத்திய அரசுக்கு வரிசலுகை வழங்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கடிதம் எழுதியிருந்தார், இந்நிலையில் சிறுமி மித்ராவின் சிகிச்சைக்கான மருந்துகளுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்வதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டார்.