சிம்பு & வெற்றி மாறன் படத்தில் இணையும் முன்னணி நடிகர்..?

vinoth

புதன், 25 ஜூன் 2025 (14:04 IST)
சூர்யா மற்றும் வெற்றிமாறன் இணைய இருந்த ‘வாடிவாசல்’ திரைப்படம் தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  வெற்றிமாறனின் நீண்டகால படமாக்கல் பாணியால் சூர்யா ‘வாடிவாசல்’ படத்தைத் தற்காலிகமாக கிடப்பில் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஒரு படம் உடனடியாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஜூலை மாதமே தொடங்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் ஒரு கேங்ஸ்டர் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்துக்கும் ‘வடசென்னை ‘ படத்துக்கும் தொடர்பு இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிகர் மணிகண்டன் நடிக்கப் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.  மணிகண்டன் தற்போது கதாநாயகனாக அடுத்தடுத்து வெற்றிகளைக் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்