ஜவான் படத்தில் நயன்தாராவின் லுக் இதுதானா? இணையத்தில் வெளியான புகைப்படம்!

சனி, 8 ஜூலை 2023 (09:11 IST)
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில் தமிழ் தமிழ்நாட்டிலும் இந்த படத்துக்கு பெரிய வரவேற்பு இருக்கும் என நம்பப்படுகிறது. இதற்கிடையில் ஜூலை 12 ஆம் தெதி வெளியாகவுள்ள டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் படத்தோடு ஜவான் படத்தின் டிரைலரை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை தமிழகத்தில் பிரபல விநியோக நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இப்போது இணையத்தில் இந்த படத்தில் நயன்தாராவின் லுக் சம்மந்தமான புதிய புகைப்படம் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்